சில போன்கள் பாதியிலேயே பேட்டெரி முடிந்துவிடும். இந்த பிரச்சனைகளால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அவற்றை தடுக்க தமிழ் GizBot சில வழிமுறைகளை வழங்குகிறது. இவற்றை பின்பற்றினால் செல் போனை விரைவில் சார்ஜ் செய்யமுடியும்.
வழிமுறைகளாவன:
- உங்கள் போன் சார்ஜரை நேரடியாக அவுட்லெடில் இணைக்கவும். இந்தமுறை கம்ப்யூட்டர் மற்றும் காரில் சார்ஜாவதைவிட வேகமாக இருக்கும்.
- சார்ஜ் செய்யும்பொழுது தேவையில்லாத எல்லா அப்ப்ளிகேசன்களையும் நிறுத்திவிடவேண்டும். GPS மற்றும் ப்ளுடூத் போன்றவற்றையும் மூடிவிட வேண்டும்.
- செல்போனின் திரையை அனைத்துவிடுவதும் நல்லது. பெரும்பாலான போன்கள் பயன்படுத்தாத பொழுது ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும். அப்படியில்லையெனில் நீங்களே திரையை அனைத்துவிடுங்களேன்.
- உங்கள் போன் வைப்ரேட் மோடில் இருந்தால், உடனே அதை நார்மல் மோடுக்கு மாற்றுங்கள். நார்மல் மோட் குறைந்த அளவு பேட்டரியயே பயன்படுத்தும்.
No comments:
Post a Comment