Sunday, 9 December 2012

உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...


நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
nomophobia signs you have it
ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...
* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.
* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.
* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.
* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.
* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

சாம்சங் கேலக்ஸி S4: இந்த குறைந்தவிலை டேப்லட் 2013ல் வருகிறது



சாம்சங் ரசிகர்கள் கேலக்ஸி S3யை வாங்குவதிலோ, நோட் 2வை வாங்குவதிலோ முனைப்புடன் இருக்கும் நிலையில் அவர்களுக்காக மற்றுமொரு புதிய தகவல் இங்கே.
அதானது, சாம்சங் கேலக்ஸி S3யின் பிரமாண்ட விற்பனையை தொடர்ந்து, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S4யை வெளியிடபோவதாக பல வதந்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இந்நிலையில், இன்று சாம்மொபைல் என்ற தளம் கேலக்ஸி S4யை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. கேலக்ஸி S4, 2013ல் வெளியாகுமென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 2வும் வெளியாகுமென கூறப்படுகிறது.
அறிக்கையின் முழு விவரங்களும் இங்கே:
சாம்சங் கேலக்ஸி S4: அந்த அறிகயின்படி கேலக்ஸி S4, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமென்றும் இதற்கு “ப்ராஜெக்ட் A” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய வதந்திகளைப் பொறுத்தவரையில் இந்த கேலக்ஸி S4ல் HD AMOLED திரை,குவாட்கோர் CPU, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளம், 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் திரையின் அளவு 5 இருக்கலாம்.
கேலக்ஸி நோட் 2: அதே சமயம் சாம்சங் நிறுவனம் விலைகுறைந்த கேலக்ஸி நோட் 2வை வெளியிடலாம். இந்த புதிய கேலக்ஸி நோட் 2வுக்கு இது உரிய பெயர் அல்ல. இருந்தாலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 2வின் நுட்பக்கூறுகளை குறைத்து ஐரோப்பாவில் வெளியிடுமென தெரிகிறது. இந்த புதிய சாதனம் அழகான வடிவமைப்புடன் இல்லாமலோ அல்லது AMOLED தொழில்நுட்பம் இல்லாமலோ இருக்கலாம்.
புதிய சாம்சங் டேப்லட்: இந்த புதிய சாம்சங் டேப்லட் கண்டிப்பாக ஆசஸ் ட்ரான்ஸ்பர்மருக்கு போட்டியாக இருக்கு. இந்த டேப்லடை 13″ அளவிலும் QWERTY டாக் என்ற தொழில்நுட்பத்திலும் வெளியிட சாம்சங் விரும்புகிறது. இதில் குரோம் ஒஸ் இருக்குமா அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளமிருக்கா என்பது குறிப்பிடப்படவில்லை.

ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்


ஐஓஎஸ்-க்கு போட்டியாக மொபைல் போன்களுக்காக பிரத்தியோகமாக 2003ல் உருவாக்கப்பட்டதே ஆன்ட்ராய்டு இயங்குதளம். முதன்முதலில் Android, Inc என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் கூகுள் நிறுவனத்தால் 2005ல் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் ஒஹெச்எ (OHA – Open Handset Alliance) என்ற நிறுவனத்தில் பதிவு செயததன் மூலம் ஓபன்சோர்ஸ் அந்தஸ்து பெற்றது.
androidஆன்ட்ராய்டு இயங்குதளம் முழுவதும் சி, சி++ மற்றும் ஜாவா கோடிங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் சான்ட்பாக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பானது. மற்றும் இந்த வகை அப்ளிகேசன்களில் ப்ரைவசியும் அதிகம்.
கூகுள் தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்கள் ஐபோன்களுக்கு மாற்றாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.
முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களில் இது, லேப்டாப்கள், நெட்புக்கள் (Netbooks), ஸ்மார்ட்புக்ஸ் (Smartbooks) மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் வெர்சன்கள்:

  • முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் செப்டம்பர் 2008ல் வெளியிடப்பட்டது.
  •  கப்கேக் (v1.5),
  • டூனுட் (v1.6),
  • எக்லைர் (v2.0) 2009ல் வெளியிடப்பட்டது.
  • ப்ரோயோ (v.2.3),
  • ஜிங்கர்பிரட் (v2.4) 2010ல் வெளிவந்தது.
  • ஹனிகாம்ப் (v3.0) 2011 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.
  • ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் – ஆனது அக்டோபர் 2011ல் வெளிவந்தது.
  • ஜெல்லிபீன் (V4.1.x) ஜூலை 9, 2012லும்,
  • ஜெல்லிபீன் (V4.2) நவம்பர் 13, 2012லும் வெளியிடப்பட்டது.
என்னதான் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உலகப்புகழ் பெற்றதாக இருந்தாலும், அப்ளிகேசன் டெவலாபின்பொழுது டிவைஸ் பிராக்மென்டேசன்(Device Fragmentation) என்ற எரர் பிரச்சனை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கூகுளுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் சண்டை


எடுத்தவுடன் எந்தமுடிவுக்கும் வந்துவிடாதீர்கள். அதாவது, கூகுள் நெக்சஸ் 10க்கும் ஆப்பிளின் ஐபேட் 4க்குமிடையில் பலத்த போட்டிநிலவுவதாக சமீபத்திய ஆய்வுகளைக்கொண்ட சந்தைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு டேப்லட்களும் ஏறத்தாழ ஒரே நுற்பக்கூறுகள் கொண்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டும் ஒரே திரை அளவுகளைக்கொண்டுள்ளது. அதாவது 10″ ஆகும்.

கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளதைக்கொண்ட டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிதுவருவதாகவும் அது எந்த அளவெனில், 2011 கடைசி காலாண்டில் 29.1 சதவிகிதத்திலிருந்து 2012ன் அதே காலகட்டத்தில் இதனளவு 41.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் ஐபேட் டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவருகிறது. முன்னர் 64.5% இருந்த விகிதம் இப்பொழுது 56.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஆன்ட்ராய்டு டேப்லெட்களின் சந்தை மதிப்பு அதிகரித்ததற்கு முக்கியகாரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுவது கூகுளின் நெக்சஸ் 7. ஆனால் ஆப்பிளின் ஐபேடில் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிளின் ஐபேட் 4 மற்றும் ஆன்ட்ராய்டு நெக்சஸ் 10 ஆகியவற்றிற்கான நுட்பக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எடை மற்றும் அளவுகள்: நெக்சஸ் 10, 263.8 x 177.8 x 8.9 என்ற அளவிலும் 603 கிராம்கள் எடையுடனும், ஐபேட் 4, 241.2 x 185.7 x 9.4 என்ற அளவிலும் 652 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.
திரை: நெக்சஸ் 10, 10.1″ டச்ஸ்க்ரீன் மற்றும் 2560 x 1600 பிக்சல் ரெசுலூசன். ஐபேட் 4, 9.7″ LED டச் திரை மற்றும் IPS தொளில்நுட்பதிலுள்ள 2048 x 1536 பிக்சல் ரெசுலூசன்.
ப்ராசசர்: நெக்சஸ் 10, 1.7GHZ கார்டெக்ஸ் A15 டூயல் கோர் 9 ப்ராசசர். ஐபேட் 4, ஆப்பிள் A6X ப்ராசசர்.
இயங்குதளம்: நெக்சஸ் 10, ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன். ஐபேட் 4, ஆப்பிள் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.
கேமரா: நெக்சஸ் 10 மற்றும் ஐபேட் 4 ஆகிய இரண்டும் 5எம்பி ரியர் கேமரா பயன்படுத்துகிறது.
நினைவகம்: நெக்சஸ் 10, 16ஜிபி/32ஜிபி உள்நினைவகம், 2ஜிபி ரேம் மற்றும் ஐபேட் 4ல் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்நினைவகம், 512எம்பி ரேம் உள்ளது.
இணைப்பான்கள்: மைக்ரோ USB, WiFi, ப்ளுடூத், 3G மற்றும் உள்ளார்ந்த GPS.
பேட்டரி: நெக்சஸ் 10, 9,000mAh பேட்டரியில் 9 மணிநேரம் பேசும்பொழுதும், 500 மணிநேர ஸ்டான்ட்பை வசதியும் உள்ளது.
ஐபேட் 4ல் 10 மணிநேர பேக்கப் வசதியும் உள்ளது.

விலை: ஐபேட் 4 விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நெக்சஸ் 10 விலை ரூ.32,850 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக எந்த இயங்குதளம் கொண்ட டேப்லெட் வாங்குவதென்பது பயனாலரைப்பொருத்ததென்பதே.

உடையாத திரையுடன் வரப்போகிறதா சாம்சங் கேலக்ஸி S4?


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4யை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதாகவும் இதன் திரை உடயாததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கேலக்ஸி S4 என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிறுவனதிலிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையிலேயே கேலக்ஸி S4 மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தற்பொழுது தயாரிப்பு நிலையிலுள்ள இந்த அடுத்ததலைமுறை தொழில்நுட்பம்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமென தெரிகிறது.
அதேபோல் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட் போன் கண்ணாடி மற்றும் பாலிமர் ஆகியவை கொண்ட கலவையால் செய்யப்படும் உடையாத திரையுடன் வெளிவரப்போவதாக கூறுகின்றன.
இதன் சில நுட்பக்கூறுகளாவன,
  • 2 GHZ குவாட் கோர் ப்ராசசெர்
  • 5″ பெரிய திரை,
  • 1080 பிக்செல் ரெசுலூசன்,
  • 13எம்பி கேமரா,
  • 2ஜிபி ரேம்.
விலையைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.

ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை சேர்ப்பது எப்படி?


How to add mobile number on Your Facebook in a Easy Way நண்பர்களுடன் சிறப்பாக தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவதில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சிறப்பாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை சம்மந்தமாக அதிகம் ஃபேஸ்புக்கில் தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் மொபைல்போன் எண்களை பகிர்ந்து கொள்வது சிறந்த ஒரு வழியாக இருக்கும். இதனால் வேலை
சம்மந்தமாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளபவர்கள், ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பரிமாறி கொள்வது ஒரு வகையில் நல்லது என்று கூறலாம்.
உதாரணத்திற்கு மற்றவர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம், ஃபேஸ்புக்கில் நம்முடன் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு சில வழிகளை நாம் வழங்க வேண்டி இருக்கும்.இதனால் ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பகிர்ந்து கொள்வதால், நம்மை அனுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு இது ஏதுவாக இருக்கும்.
  • இப்போது ஃபேஸ்புக் பக்கத்தில் எப்படி மொபைல் எண்ணை சேர்ப்பது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதில் எடிட் ப்ரொஃபைல் என்ற ஆப்ஷனையும் பார்க்கலாம். அதில் கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்த பின், புதிய விண்டோ திறக்கப்படும்.
  • இதில் போன் என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பின் கன்ட்ரி என்ற இடத்தில் நமது நாட்டினை குறிப்பிட்டு மறக்காமல் சேவ் சேன்ஜஸ் என்ற பட்டனை க்ளிக் செய்துவிட வேண்டும்.
  • இல்லையென்றால் மாற்றப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட தகவல்கள் சேவ் செய்யப்படாமல் போய்விடும். இப்படி எளிதாக மொபைல் எண்ணை ஃபேஸ்புக்கில் சேர்க்கலாம்.
  • இப்படி மொபைல் எண்ணை கொடுப்பதினால் வேலை சம்மந்தமான விஷயத்திற்கு உதவுவது மட்டும் அல்லாமல், நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும் சிறப்பாக பயன்படும்.

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!


How to Update Android Jelly Bean Easily on Samsung Galaxy S3
கேலக்ஸி எஸ்-3 வாடிக்கையாளர்களுக்கு குஷிகரமான ஒரு தகவல் காத்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி வழங்கப்பட இருக்கிறது.
நமது நாட்டில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்பபோன் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலும், வெளியீடு செய்யப்பட்ட தருணத்திலும் வாடிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தான்.
இப்போது அடுத்த அடுத்து இந்த ஸ்மார்ட்போன் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு வசதியினை வழங்க தயாராகிறது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்டு வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்கும்.
இந்த ஜெல்லி பீன் வெர்ஷனில் முக்கியமாக கூறப்பட வேண்டிய விஷயம் இருக்கிறது. இதில் மேம்படுத்தப்பட்ட பிராவுசர் மற்றும் ஃபாஸ்டர் இன்டர்ஃபேஸ் வசதியினை பெறலாம்.
தொழில் நுட்ப வசதியில் சிறப்பாக மேம்பாடுத்தப்பட்ட வசதிகளையும், வேகத்தினையும் பெற இதில் ப்ராஜெக்ட் பட்டர் வசதியினை பெறலாம். செட்டிங்ஸ் மெனு, 2 ஹோம்ஸ்கிரீன் மோட்ஸ், நியூ நோட்டிஃபிக்கேஷன் பார், பாப் அப் ப்ளே ஸ்கிரீன் ஆகிய வசிதகளை இதில் பயன்படுத்தலாம்.
சாம்சங் கீஸ்சை பயன்படு்த்தி இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி டவுன்லோட் செய்வதென்று பார்க்கலாம். சாம்சங் கீஸ்சை முதலில் டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை, பிசி கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.
இப்படி இணைத்த பின் ஜெல்லி பீன் அப்கிரேட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதன் பின் ஃபர்ம்வேர் அப்கிரேட் பட்டனை அழுத்த வேண்டும். நிச்சயம் இது போன்ற அப்கிரேட் வசதியினை செய்யும் போது, தகவல்களை பேக்கப் செய்து கொள்ள மறந்துவிடக்கூடாது. இந்த அப்கிரேடு வேலை முடிந்த உடன், இதை ரீஸ்டாட் செய்ய வேண்டும்.
இதன் பின் மீண்டும் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டரில் இருந்து அகற்றிவிட்டு, திரும்பவும் இணைக்க வேண்டும். இது எதற்காக என்றால் தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்வதற்காக.

பேலன்ஸ் இல்லாத சமயத்திலும் மொபைலில் போன்கால் செய்ய முடியுமா?


How to make a call with Zero Balance in your mobile மொபைலில் பேலன்ஸ் இல்லாத தருவாயிலும் எப்படி போன்கால் செய்வது என்பதன் தகவலை இங்கே பார்க்காலம். அதற்கு குறிப்பிட்ட எண்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த எண்ணிற்கு மெசேஜ் செய்தோமானால், எளிதாக எமர்ஜென்சி கால்கள் செய்து கொள்ளலாம்.
ப்ரீப்பெய்டு ஏர்டெல் தொலைதொடர்பு சேவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 141# என்ற எண்ணிற்கு டையல் செய்ய வேண்டும். இதன் பிறகு ஒரு பாப் அப் விண்டோ திறக்கப்படும். இதில் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் தேவையான ஆப்ஷனை பயன்படுத்தி பெற வேண்டிய எமர்ஜென்ஸி கால் வசதியினை பெறலாம்.
வோடாஃபோன் தொலை தொடர்பு சேவையில் ட்ரான்ஸ்ஃபர் பேலன்ஸ் வசதி உள்ளது. இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணத்திற்கு *131*MRP*Receiver number#  என்று கொடுத்து டையல் செய்ய வேண்டும்.
*131*50*1234567890* என்று கொடுக்க வேண்டும். இப்படி வோடாஃபோன் தொலை தொடர்பு சேவையின் மூலம் எளிதாக ட்ரான்ஸ்ஃபர் பேலன்ஸ் வசதியினை பெறலாம். ஸீரோ பேலன்ஸ் இருக்கும் போது ஐடியா தொலை தொடர்பு சேவையிலும் சில வசதிகளை பெறலாம். இதில் ஐடியா லைஃப்லைன் மூலம் இந்த வசதியினை எளிதாக பெறலாம். 53567 என்ற எண்ணிற்கு டையல் செய்தால் ரூ. 3க்கான பேலன்ஸ் வழங்கப்படும்.

மொபைல் தொலை தொடர்பு சேவை மாற சில வழிகள்!


How to Port One Mobile Network to Another Mobile Networkமொபைல் நெட்வொர்க் வசதியினை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர் அந்த மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. இதனால் மொபைல் எண் மாறாமல் வேறு மொபைல் நெட்வொர்கிற்கு எப்படி மாறுவது என்று பார்க்கலாம்.
போர்ட்<99999888888>மொபைல் எண்> டைப் செய்ய வேண்டும். அதாவது இதை ஆங்கிலதிலும் பார்க்கலாம். PORT <99999888888>your number> என்று டைப் செய்ய வேண்டும். இப்படி டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும்.
இந்த எண்ணிற்கு மெசேஜ் செய்த பிறகு ஆப்பரேட்டரிடமிருந்து மெசேஜ் வரும். அதன் பின் எந்த தொலை தொடர்பு சேவைக்கு மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த தொலை தொடர்பு சேவை நிறுவனத்தின் ஷோ ரூமுக்கு சென்று நெட்வொர்கிற்கு மாற விரும்புவதை சொல்ல வேண்டும்.
இதற்காக பிரத்தியேகமாக ரூ.19 சார்ஜ் செய்யப்படும். இதன் பிறகு சிம் கார்டிற்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த வேண்டும். இது போன்ற சில எளிய வழிமுறைகளை கையாண்டு மொபைல் எண் மாறாமல், மொபைல் தொலை தொடர்பு சேவையினை மாற்றலாம்.

ஃபேஸ்புக்கில் விரும்பிய மொழிகளில் டைப் செய்ய சில வழிகள்!



How to type Regional Languages on Facebook or anywhere
சமூக வலைத்தளம், இமெயில் என்று எதுவனாலும் சிறந்த முறையில் தமிழ், ஹிந்தி, கன்னடா என்று எந்த மொழியிலும் எளிதாக டைப் செய்ய வேண்டுமா? அதற்கு இங்கே ஒரு எளிதான வசதியும் உள்ளது.
பல வசதிகளை வழங்கி வரும் கூகுள் இப்படி வேறு மொழிகளில் எளிதாக டைப் செய்யவும் சில வசதிகளை உருவாக்கி உள்ளது. இதற்கு கூகுளின் ட்ரான்ஸிலேஷன் ஐஎம்இ சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இப்படி இந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் எளிதாக எந்த மொழியில் டைப் செய்ய விரும்புகிறோமோ அதில் டைப் செய்யலாம்.
How to type Regional Languages on Facebook or anywhere
இதற்கு இன்னும் ஒரு சிறந்த வழியும் இருக்கிறது. கூகுளின் ஐஎம்இ என்ற ட்ரானிஸிலேஷன் வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இப்படி நுழைந்தால் தனியாக ஒரு விண்டோ திறக்கப்படும். இதில் வலது பக்கம் நிறைய மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த மொழி தேவையோ அதை க்ளிக் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் கீழ் டவுன்லோட் என்ற பட்டனும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
How to type Regional Languages on Facebook or anywhere அதன் பிறகு ஸ்டார்ட் பட்டன்—> செட்டிங்ஸ்—> கன்ட்ரோல் பேனல் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு கன்ட்ரோல் பேனலின் விண்டோ திறக்கப்படும். ரீஜினல் அண்டு லேன்குவேஜ் என்ற ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின் திறக்கப்படும் விண்டோவில் ரீஜினல் ஆப்ஷன்ஸ், லேன்குவேஜ் மற்றும் அட்வான்ஸ் என்று மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று பட்டன்களில் உள்ள வசதிகளிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
How to type Regional Languages on Facebook or anywhere
இதில் லேன்குவேஜ் —> டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ் ஆப்ஷனில் (டீடெய்ல்ஸ்) என்ற பட்டன் இருக்கும். இதை க்ளிக் செய்தால் காம்பேட்டிமிலிட்டி கான்ஃபிகரேஷன் என்பதற்கும் கீழ் இருக்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும். அதோடு சிஸ்டம் கான்ஃபிகரேஷன் என்பதை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.
How to type Regional Languages on Facebook or anywhere
மீண்டும் கன்ட்ரோல் பேனல் —>ரீஜினல் லேன்குவேஜ்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் —>டெக்ஸ்ட் சர்வீசஸ் அண்டு இன்புட் லேன்குவேஜஸ் (டீடெயில்ஸ்) —>செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் லேன்குவேஜ் பார் என்ற ஆப்ஷனை க்ளக் செய்யவும். ஷோ தி லேன்குவேஜ் பார் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்துவிட்டு, ஓகே கொடுத்துவிட வேண்டும்.
How to type Regional Languages on Facebook or anywhere
பிறகு மீண்டும் கன்ட்ரோல் பேனல்—>ரீஜனல் அண்டு லேன்குவேஜ் ஆப்ஷன்ஸ்—>லேன்குவேஜ் டேப் க்ளிக் செய்யவும். இதில் இன்ஸ்டால் ஃபைல்ஸ் ஃபார் ஈஸ்டு ஏஷியன் லேன்குவேஜ் என்று கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஓகே கொடுத்துவிட வேண்டும். இதன் பிறகு சாஃப்ட்வேர் எளிதாக டவுன்லோட் செய்யப்பட்டுவிடும். இதன் பின் நாம் என்ன மொழிகளை அதில் செலக்ட் செய்தோமோ அந்த மொழியை எளிதாக ஃபேஸ்புக் போன்று எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரியினை சேமிக்க சில வழிகள்!


How to Increase the battery life of your Android smartphone
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க வேண்டும் என்றால், அதற்கு சில வழிகள் உள்ளன. அதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் அப்ளிக்கேஷன்களை இன்ஸ்டால் செய்து கொள்வது நல்லது. இந்த பவர் கன்ட்ரோல் என்ற அப்ளிக்கேஷனை ஸ்மார்ட்போன்களில் டவுன்லோட் செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் வைபை, ப்ளூடூத் போன்ற சேவைகளை தேவையானால் எளிதாக ஆன் செய்து கொள்ள முடியும். அது மட்டும்
அல்லாமல் ஸ்மார்ட்போனில் உள்ள திரை வெளிச்சத்தினை எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
நாம் பயன்படுத்தும் மின்னஞ்ல் அப்ளிக்கேஷனில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். திரையின் வெளிச்சத்தினை தேவை கேற்ப வைத்து கொண்டால் போதும். இதன் மூலம் பேட்டரியின் ஆற்றல் நிறைய வெளியாவதையும் உணர முடியும். இதனால் திரையின் வெளிச்சத்தினை கவனிக்க வேண்டும்.
பேட்டரியின் ஆற்றலை சேமிக்க பிரத்தியேகமான சில அப்ளிக்கேஷன்களை வழங்குவது இன்னும் சிறந்ததாக இருக்கும். உதாரணத்திற்கு ஸ்கிரீன்பில்பவர் மேனேஜர் போன்ற அப்ளிக்கேஷன்கள் திரையில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை செய்து பேட்டரியின் ஆற்றலை சேமித்து தருகிறது.
மொபைலை சார்ஜ் செய்யும் போது வேண்டிய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து கொள்வது ஒரு வகையில் சிறந்த வழி. பொதுவாகவே டவுன்லோட் செய்யும் சமயத்தில் அதிகமான பேட்டரி ஆற்றல் தேவைப்படுகிறது. அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், மொபைலை சார்ஜ் செய்யும் போது டவுன்லோட் செய்து கொள்வது நல்லது

மின்சாரம் இல்லாத போதும் மொபைல் போனை எவ்வாறு முழு சார்ஜில் வைத்திருப்பது – சில யோசனைகள்


இந்த நவீன யுகத்தில் மொபைல் போன்கள் 24 மணி நேர தேவையாகிவிட்டது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், இசை, ரேடியோ மற்றும் டிவி நிகழ்ச்சிள் ஆகிய எல்லாவற்றையும் தற்போது இந்த மொபைல் போன்கள் வழங்கி வருகின்றன. ஆகவே இந்த மொபைல் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.
ஆனால் இந்த மொபைல் போன்களில் சார்ஜ் இல்லை என்றால் அந்த போன்களால் எந்தவித பயனும் இல்லை. மேலும் மின்சாரம் இல்லாத போது இந்த போன்களில் சார்ஜ் இல்லையென்றால் இந்த போன்களுக்கு சார்ஜ் ஏற்றவும் முடியாது. அதனால் இந்த மொபைல் போன்களுக்கு வேலையும் இருக்காது.
MyBatteryஆகவே 24 மணி நேரமும் மொபைல் போன்களில் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் மொபைல் போன்களில் மொபைல் போன்களை எவ்வாறு சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்வது என்பதைக் கீழே பார்க்கலாம்.
குறிப்பாக மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள பேட்டரிகளுக்கு மாற்றாக எப்போதுமே ஒரு பேக்கப் சார்ஜர் இருக்க வேண்டும். இந்த பேக்கப் சார்ஜர்கள் 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக விற்கப்படுகின்றன. குறிப்பாக சாக் ஸ்பார்க் போன்ற பேக்கப் சார்ஜர்கள் மின்சாரம் இல்லாத போது நமது மொபைல் போனில் சார்ஜ் தீராமல் பார்த்துக் கொள்கிறது.
அதுபோல் சோலார் பவரில் வரும் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். அதோடு கார் சார்ஜரையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மொபைல் போன்களில் சார்ஜ் ஏற்ற முடியும்.
மேலும் பவர் இன்வெர்ட்டரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பவர் இன்வெர்ட்டர்கள் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களுக்குத் தேவையான சார்ஜை வழங்கும்.
அடுத்ததாக லேப்டாப்புகள் ஒரு பேக் அப் ஜெனராட்டர்களாக இருக்கின்றன. ஆகவே லேப்டாப்புகள் முழுமையாக சார்ஜ் பெற்றிருந்தால் மின்சாரம் இல்லாத போது லேப்டாப்புகளில் மொபைல் போன்களை யுஎஸ்பி மூலம் இணைத்து சார்ஜ் போடலாம்.
மேலும் மின்சாரம் இல்லாத போது மொபைல் போன்களில் உள்ள போன் செட்டிங்கை பரிசோதித்து, அதில் இயங்கும் அப்ளிகேசன்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அப்ளிகேசன்களை உடனே நிறுத்த வேண்டும். இதன் மூலம் மொபைல் போனின் சார்ஜை சேமிக்க முடியும்.
ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களின் பேட்டரியின் நீடித்த உழைப்பிற்கு ஏராளமான இலவச அப்ளிகேசன்கள் உள்ளன. குறிப்பாக காரட் போன்ற இலவச அப்ளிகேசன்களைப் பயன்படுத்தினால் மொபைல் போன்களின் பேட்டரியும் நீடித்து உழைக்கும்.

20 சதவிகிதம் விலைகுறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் 2


இன்றைய நிலவரப்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் 2வின் பதிப்பான 10.1னின் விலையை 20 சதவிகிதம் குறைதுள்ளதாகத் தெரிகிறது. சஹோளிக் என்ற இணைய விற்பனை நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. சஹோளிக் பொறுத்தவரை சிலநாட்களுக்கு முன் ரூ.31,990க்கு விற்கப்பட்ட கேலக்ஸி டேப் 2வானது தற்பொழுது ரூ.25,990க்கு விற்கப்படுகிறது. நாளை இந்திய சந்தைகளில் வெளியாகப்போகும் ஐபேட் மினி மற்றும் ஐபேட் 4 ஆகிய இரண்டுமே சாம்சங்கின் இந்த திடீர் விலைகுறைப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஐபேட் மினி, இந்தியாவில் ரூ.21,900க்கும் ஐபேட் 4 ரூ.31,900க்கும் விற்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்பிளின் இவ்விரண்டும் இந்திய சந்தையில் நல்ல விற்பனையேற்றம் பெறுமென சந்தயாளர்கள் கருதுகிறார்கள்.

கேலக்ஸி டேப் 2வின் 10.1 பொறுத்தவரை அதிநவீன நுடபக்கூறுகலையே கொண்டுள்ளன. அவை 10.1″ WXGA திரை, 3G, மைக்ரோ SD மற்றும் சிறந்த கேமராவைக்கொண்டுள்ளது.

ஆனால் ஆப்பிளுக்குப் போட்டியாக கேலக்ஸி டேப் 2, 10.1 இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

புதிய டேப்லட்டினை களமிறக்கும் விஷ்டெல்!


Wishtelடேப்லெட் பிசிகளைத் தயாரித்து வரும் விஷ்டெல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து வரும் அக்டோபர் 1 அன்று ஒரு புதிய டேப்லெட் பிசியைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டிற்கு இரா ஐகன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரா ஐகன் டேப்லெட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 7 இன்ச் டிஎப்டி எல்சிடி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளம் மற்றும் 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் போன்றவற்றைக் கொண்டு வருகிறது.
மேலும் இந்த டேப்லெட்டில் 1ஜிபி ரேம் மற்றும் 3ஜி சிம் போன்றவையும் உள்ளன. அதோடு இந்த டேப்லெட்டில் 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளும் உள்ளன. இந்த டேப்லெட்டில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன் ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் சூப்பாரக பாடல்களைக் கேட்கலாம்.
இந்த டேப்லெட் யுஎஸ்பி, எஸ்டி கார்டு, ஆடியோ மற்றும் வீடியோ போன்ற வசதிகளையும் வழங்குகிறது. கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட்டில் 2.0எம்பி பின்பக்க கேமராவும் மற்றும் 0.3எம்பி முகப்பு வெப் கேமராவும் உள்ளன. இதன் 4ஜிபி சேமிப்பை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.
ரூ.10,500க்கு விற்பனைக்கு வரும் இந்த இரா டேப்லெட் பிஎஸ்என்எல்லின் 3ஜி சிம் மற்றும் 2 மாதங்களுக்கான இலவச 2ஜிபி 3ஜி டேட்டாவையும் வழங்குகிறது.

மொபைல் சார்ஜ் செய்ய டபிள் ஸ்மார்ட் வழிகள்!


How to charge you mobile:5 Smart Ways மொபைல்போன்களில் சிறந்த தொழில் நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி என்பது மிக முக்கியம். ஆனால் மியூசிக், வீடியோ என்று அதிகம் பேட்டரி செலவாகும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துபவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் எப்படியெல்லாம் உங்கள் மொபைலை முன் கூட்டியே சார்ஜ் செய்து கொள்வதென்பதை பார்க்கலாம்.
சார்ஜ் செய்வதற்குகென்று தனியாக நேரம் ஒதிக்க வைக்க முடியாது. பல வேலைகளில் சார்ஜ் செய்ய மறப்பதுண்டு. இதனால் அலுவலகம் வந்து சார்ஜ் செய்பவர்களை பார்த்திருப்போம். அலுவலகத்தில் முக்கிய போன்கால் வரும் என்கிற போது, இன்னும் சற்று முன்பாகவே சார்ஜ் செய்து கொள்ளவது அவசியம். காரில் இப்போதெல்லாம் சார்ஜ் செய்து கொள்ளும் போர்ட்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
எவ்வளவு சார்ஜ் செய்தாலும், பேட்டரி நிற்பதில்லை என்பவர்கள் யூஎஸ்பி கோர்டை பயன்படுத்தி கொள்ளவது ஒரு வகையில் நல்லது. இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும் என்றால் ஹேண்டு க்ரேன்ங்க் வசதியை பயன்படுத்தலாம். இதில் ஆன்ட்ராய்டு எலக்ட்ரானிக் சாதனம், இ-ரீடர்ஸ், டிஜிட்டல் கேமரா, ஜிபிஎஸ், ஐஓஎஸ் போன்று வெவ்வேறு விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் எளிதாக சார்ஜ் செய்ய இந்த பாக்கெட் சாக்கெட் பயன்படும்.
டபிள் ஸ்மார்ட்டான ஐடியா வேண்டும் என்றால் சோலார் சார்ஜிங் வசதி கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மிக சிறந்தது. இதனால் மிக சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இது போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்ய சூரிய ஒளி போதுமானது. விலை கொஞ்சம் அதிகமாக இருப்பினும், இந்த சோலார் சார்ஜ் வசதி கொண்ட எலக்ட்ரானிக் சாதனத்தை வாங்கிவிட்டால் அடிக்கடி சார்ஜ் ப்ளக் தேடி ஓட வேண்டியதில்லை.
சார்ஜ் செய்ய நேரமில்லாதவர்கள் கைவசம் ஒரு பேட்டரி பேக்கப் வைத்து கொள்ளவது தான் நல்லது. இப்படி பேட்டரி பேக்கப் வைத்திருப்பது, இக்கட்டான சமயங்களில் கைகொடுக்கும்.

போனை விரைவில் சார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள்


தமிழ்நாட்டிலுள்ள மின்பற்றாக்குறைகளில் மிகவும் முக்கியமானது, செல் போனுக்கு கூட சார்ஜ் செய்யமுடியவில்லை என்பதே. அதையும் தாண்டி, பிசினஸ் செய்பவர்களும், மாணவ மாணவிகளுக்கும் இன்றியமையாதது செல் போன் மற்றும் செல் போன் சார்ஜ்.
சில போன்கள் பாதியிலேயே பேட்டெரி முடிந்துவிடும். இந்த பிரச்சனைகளால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அவற்றை தடுக்க தமிழ் GizBot சில வழிமுறைகளை வழங்குகிறது. இவற்றை பின்பற்றினால் செல் போனை விரைவில் சார்ஜ் செய்யமுடியும்.

வழிமுறைகளாவன:

  • உங்கள் போன் சார்ஜரை நேரடியாக அவுட்லெடில் இணைக்கவும். இந்தமுறை கம்ப்யூட்டர் மற்றும் காரில் சார்ஜாவதைவிட வேகமாக இருக்கும்.
  • சார்ஜ் செய்யும்பொழுது தேவையில்லாத எல்லா அப்ப்ளிகேசன்களையும் நிறுத்திவிடவேண்டும். GPS மற்றும் ப்ளுடூத் போன்றவற்றையும் மூடிவிட வேண்டும்.
  • செல்போனின் திரையை அனைத்துவிடுவதும் நல்லது. பெரும்பாலான போன்கள் பயன்படுத்தாத பொழுது ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும். அப்படியில்லையெனில் நீங்களே திரையை அனைத்துவிடுங்களேன்.
  • உங்கள் போன் வைப்ரேட் மோடில் இருந்தால், உடனே அதை நார்மல் மோடுக்கு மாற்றுங்கள். நார்மல் மோட் குறைந்த அளவு பேட்டரியயே பயன்படுத்தும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

வியக்கவைக்கும் வருங்கால மொபைல் போன்கள்

bend-mobileமொபைல் போன்கள் தற்பொழுது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. மொபைல் போன்கள் இல்லாதவர்களோ அதைப்பற்றி தெரியாதவர்களோ யாருமில்லை என்றே கூறலாம். அதிலும் சிலர் செல் போன்களைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார்கள். மொபைல் போன் விரும்பிகளுக்காக சில வியக்கவைக்கும் வருங்கால மொபைல் போன்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன

Friday, 7 December 2012

சோனி எக்ஸ்பீரியா போன்களுக்கான ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்கள்



சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா வரிசை தயாரிப்புகளான எக்ஸ்பீரியா பி, யு, சோலா மற்றும் கோ ஆகியவற்றிற்கான ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்களால் ஏற்கெனவே இருந்த சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதுடன் செயல்திறனையும் அதிகப்படுத்தியுள்ளது. அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளது. ஸ்டெபிலிட்டி, WiFi, போர்ட்டபிள் ஹாட்ஸ்பாட், கேமரா, NFC மற்றும் SMS.

எக்ஸ்பீரியா பி, ஐசிஎஸ் அப்டேடை வரும் ஆகஸ்ட் மாதம் முதலும், எக்ஸ்பீரியா யு மற்றும் சோலா வரும் செப்டம்பரில் அப்டேடைப் பெறுமென சோனி மொபைல் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

சோனி எக்ஸ்பீரியா பி பயனாளர்கள் OTA அல்லது PC கம்பானியன் என்ற அமைப்பின்மூலமோ இந்த அப்டேட்களைப் பெறமுடியும். அது நாடுகள் மற்றும் செல் போன் நிறுவன பயனாளர்களைப் பொருத்தது.

சோனி எக்ஸ்பீரியா யு, சோலா மற்றும் கோ ஆகியவற்றிற்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேடை OTA முறைமூலம் ஏற்க்கனவே அனுப்பபட்டுவிட்டது.

இந்த புதிய அப்டேட்டானது இன்னும் சில வாரங்களில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.